இட்லிமாவு குழிப் பணியாரம்
0
தேவையான பொருட்கள்:
புளிப்பான இட்லி மாவு - 2 கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி - 1/4 கட்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய் வற்றல் - 2
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - 10
பாதாம் பருப்பு - 10
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக மிக சிறியதாக நறுக்கி வைக்கவும்.
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு லேசாக வறுத்து நறுக்கி வைக்கவும்.
இட்லிமாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, சோடா உப்பு போட்டு கலக்கவும்,
குழி பணியார கல்லில் எண்ணெய் ஊற்றி, பாதி குழி அளவிற்கு மாவு ஊற்றி, மூடி வைத்து, திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.