இடியாப்பம்

on on on on off 7 - Great!
4 நட்சத்திரங்கள் - 7 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 500 மி.லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இடியாப்பம் செய்வதில் முக்கிய அம்சம், அதற்கான மாவினைத் தயார் செய்வதே. மாவு சரியாக இல்லாதபட்சத்தில் இடியாப்பம் சரியாக பிழியவராது.

பச்சரிசியை இடித்து மாவு தயாரிக்க வேண்டும். மிக்ஸியில் இட்டு அரைத்தும் தயாரிக்கலாம்.

இடித்த மாவினை இலேசாக வறுத்து, மாவு பதமாகி வரும் நிலையில் எடுத்து, சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.

இன்னொறு முறையில், மாவினை இட்லி சட்டியில் துணி போட்டு வேகவைத்து, பின்பு அதனை ரவை சல்லடையில் சலித்து, கட்டிகளை உடைத்து நீக்கி, மீண்டும் மாவு சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இவ்வாறு தயார் செய்யும் மாவினை டின்னில் இட்டு பல நாள் கெடாமல் வைத்துக் கொள்ளலாம்.

இப்போது, தயார் செய்யப்பட்ட மாவுகள் கடைகளில் விற்பனைக்கு உள்ளன. சிறந்த நிறுவன மாவுகளை வாங்கி பயன்படுத்துதல் மிகவும் எளிமையானது.

தண்ணீரை மிதமாக கொதிக்க வைத்து (நன்கு கொதித்துவிடக் கூடாது, ஆறியும் இருக்கக்கூடாது), தேவையான அளவு மாவில் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, இடியாப்பக்குழலில் இட்டு பிழிந்து இட்லிப்பானையில் அவித்து எடுக்கவும்.

குறிப்புகள்: