ஆலு பரோட்டா (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

உருளைக்கிழங்கு - 4

சீரகம் - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 1/4 கட்டு

கொத்தமல்லி தழை - 1/2 கட்டு

பச்சைமிளகாய் - 4

எண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவில் அரை மேசைக்கரண்டி உப்பு, ஒரு மேசைக்கரண்டி சூடான எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தனியே வேக வைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வேக வைத்த உருளைக்கிழங்குடன் சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

மாவை பெரிய உருண்டையாக எடுத்து தடிமனான சப்பாத்தியாக தேய்து நடுவில் 1 மேசைக்கரண்டி உருளைக்கிழங்கு கலவையை வைத்து, கலவை வெளியே வராமல் உருட்டிக் கொள்ளவும்.

இதனை சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக் கல்லில் சப்பாத்திகளைப் போட்டு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: