ஆலு பரோட்டா (4)
தேவையான பொருட்கள்:
உருளைகிழங்கு - 6
கோதுமை மாவு - 5 கப்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பச்சைமிளகாய் - 4
சீரகம் - 1 தேக்கரண்டி
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
வத்தல் தூள்- 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு தூள்- 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைகிழங்கை கழுவிவிட்டு,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
பின் தோலை எடுத்துவிட்டு நன்கு பிசைந்துக்கொள்ளவும்.
பின் அதில் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கவும்,பின் மசாலாதூள்,மஞ்சள்தூள்,சீரகத்தூள்,கொத்தமல்லிதூள்,சோம்புதூள்,வத்தல்தூள்,கரம் மசாலாதூள்,எல்லாதூளையும் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.
பின் அடுப்பில் சட்டியைவைத்து அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் போடவும்,பின் உருளைகிழங்கை போட்டு நன்கு கிளறி உப்பு போட்டு சிறிது நேரம் தீயை மிதமானதாக வைத்து கிளறவும்.பின் இறக்கி ஆறவிடவும்.
பின் கோதுமை மாவில் உப்பு,தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசையவும்.அதன் மேல் ஒரு மூடியை போட்டு மூடி15 நிமிடம் ஊறவிடவும்.
பின் மாவை எடுத்து பெரிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி மாவு போல வட்டமாக தேய்த்து மேலே மாவுதூவி தேய்த்துக்கொள்ளவும் பின் அதில் ஆறிய உருளைகிழங்கு கலவையைவைத்து எல்லா ஓரங்களையும் பிடித்து சேர்த்துவைக்கவும்.பின் மெதுவாக தேய்க்கவும்.மேலே மாவு தூவி தேய்க்கவும் இதே போல் எல்லா மாவையும் தேய்த்து உள்ளே உருளைகிழங்கு கலவையை வைத்து முதலில் மாதிரியே செய்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு தவாவை வைத்து வளர்த்து வைத்த பரோட்டாவை போட்டு தீயை கூட்டிவைத்து பின் திருப்பி போடவும்.பின் தீயை குறைத்து பரோட்டா மேல் எண்ணெய் ஊற்றி வேகவிடவும் ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி வேகவிடவும் நல்ல ப்ரவுன் கலரில் வந்ததும் எடுத்துவிடவும்.