ஆலு பரோட்டா

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு (அல்லது) கோதுமை மாவு - 4 கப்

பட்டர் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

பில்லிங் செய்ய:

வேகவைத்த உருளைக்கிழங்கு - 3

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மல்லித் தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, மல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும்.

வதக்கிய கலவையுடன் உருளைக்கிழங்கைச் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர நன்கு மசித்துவிடவும்.

மாவில் பட்டர், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவில் ஒரு உருண்டை அளவு எடுத்து சப்பாத்தி போல இட்டுக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.

மசாலா கலவை வெளியில் தெரியாதவாறு மூடி உருண்டையாக்கி, பின்னர் அதை மொத்தமான சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும்.

தவாவை காயவைத்து எண்ணெய் ஊற்றி அதில் தயார் செய்த சப்பாத்தியை வேகவிட்டு எடுக்கவும். சுவையான ஆலு பரோட்டா ரெடி.

குறிப்புகள்: