ஆலு சப்பாத்தி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 200 கிராம்

உருளைக்கிழங்கு - 1 பெரியது

பெரிய வெங்காயம் - 1 சின்னது

தக்காளி - 1/4

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லி தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவை உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து நல்லா மசித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நல்லா பொடியாக நறுக்கிய பெ.வெங்காயம், தக்காளி சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும். மசாலா பொடிகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மல்லி இழை தூவி நல்லா கிளறி இறக்கி வைக்கவும்.

பின்னர் சப்பாத்தி தேய்த்து அதில் சிறிது மசாலா வைத்து தேய்த்து சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: