ஆந்திரா கார தோசை
4 - Ok!
2 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தோசைமாவு - 1 கப்
வரமிளகாய் - 10
முழுபூண்டு - 1
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கார சட்னி:
கொதிக்கும் நீரில் வரமிளகாயை 6 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பூண்டுகளை உரித்து வைக்கவும்.
பின்னர் வரமிளகாய், பூண்டுகளை உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தோசைகல்லில் தோசையை வார்க்கவும். அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி சமமாக எல்லா இடங்களிலும் பரப்பவும்.
அரைப்பதமாக வெந்ததும் கார சட்னி 2 தேக்கரண்டி சேர்த்து எல்லா இடங்களிலும் சமமாக பரப்பவும். இரு பக்கமும் வேகவிட்டு மடித்து பரிமாறவும்.