அவல் தோசை
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
அவல் - 1 கப்
தயிர் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும் அவலையும் அலசி விட்டு தனி தனியே 5 அல்லது 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
தனியாக அரைத்து ஒன்றாக கலந்து 7 அல்லது 8 மணி நேரம் புளிக்க விடவும்.
புளித்ததும் தயிர் உப்பு சேர்த்து கலந்து தோசையாக வார்க்கவும்.
குறிப்புகள்:
இந்த சோடியை சிறு தீயில் மூடி போட்டு சுடவும். திருப்பி போட வேண்டாம்.
எந்த ஒரு சட்னியும் இதற்க்கு பொருந்தும்.