அவல் உப்புமா (7)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கெட்டி அவல் - 1/2 கப்

உருளை கிழங்கு - 1

இஞ்சி பச்சை மிளகாய் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

ஜீரகம் - 1/2 தேக்கரண்டி

பச்சை கொத்தமல்லி பொடியாக அரிந்தது - சிறிது

காரட் பொடியாக துருவியது - 2 தேக்கரண்டி

எலுமிச்சம் பழம் - 1

எண்ணை - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அவலை நன்றாக சுத்தம் செய்து, 90 நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுறித்து, சிறிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி அதில் ஜீரகம் போட்டு, பிறகு இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுது போட்டு அரை நிமிடம் வதக்கவும்.

உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

சிறிது ரோஸ்ட் ஆனதும் அதில் அவலை போட்டு நன்றாக கிளறவும்.

அடுப்பை நிறுத்தவும். பிறகு ஒரு ஸ்பூன் நெய், துருவிய காரட், கொத்துமல்லி எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்: