அவல் உப்புமா (6)
தேவையான பொருட்கள்:
கெட்டி அவல் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 10
வர மிளகாய் - 4
உருளைக் கிழங்கு - 1
காரட் - 1
கடுகு உளுந்து - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அவலைக் களைந்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
வெங்காயம், உருளை, காரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
வர மிளகாயை கிள்ளி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து வர மிளகாய் போடவும். பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் காய்களைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
இப்போது அவலைக் கொட்டி ஐந்து நிமிடம் பிறட்டவும். பின் தேங்காய் துருவல் தூவி இரண்டு நிமிடம் கழித்து இறக்கி எலுமிச்சை மூடியை பிழிந்து பிறட்டி மூடி வைக்கவும்.