அவல் உப்புமா (5)
தேவையான பொருட்கள்:
அவல் - 2 கோப்பை
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கோப்பை
மெல்லியதாக நறுக்கிய இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு
தேங்காய்ப்பூ - 1/2 கோப்பை
கொத்தமல்லி - 1/4 கோப்பை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு, சீரகம் சேர்த்து - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
முந்திரி (அல்லது) வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சைசாறு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - 1 மேச்சைகரண்டி
உப்பு - அரைத்தேக்கரண்டி
செய்முறை:
அவலை சுத்தம் செய்து நீரில் இரண்டு அல்லது மூன்று நிமிடம் ஊறவைத்து சொட்ட பிழிந்து வைக்கவும்.
கடலைப்பருப்பையும், உளுந்தையும் நீரில் ஊறவைத்து எடுத்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகத்தைப் போட்டு வெடித்ததும் ஊறிய பருப்புகளைப் போட்டு அவைகள் சிவந்ததும் கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பை போட்டு வறுக்கவும்.
பிறகு இஞ்சி பச்சைமிளகாயைப் போட்டு சிறிது வதக்கிவிட்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயதூளையும் சேர்க்கவும்.
பிறகு அதில் வெங்காயம் கொத்தமல்லியைப் போட்டு வதக்கி, வெங்காயம் சிறிது வெந்தவுடன் உப்பைப் போட்டு அவலைக் கொட்டி, நன்கு அவல் சூடாகும் வரை கிளறி விடவும்.
கடைசியாக எலுமிச்சைசாற்றை தெளித்து தேங்காய்ப்பூவைப் போட்டு கிளறிவிட்டு உடனே பரிமாறவும், சுவையான சிற்றுண்டி தயார்.