அவல் உப்புமா (4)
0
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 சிறு துண்டு
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - தாளிக்க சிறிது
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலை சுத்தம் செய்து தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,இஞ்சி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு கடுகு பருப்புகளை போட்டு தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சி போட்டு வதக்கவும்.
வடித்துவைத்துள்ள அவலைபோட்டு நன்கு கிளறி தேவையான உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும்.