அழகர் கோவில் தோசை (1)
தேவையான பொருட்கள்:
புளிக்காத தோசை மாவு - 3 கப்
தயிர் - 1/2 கப்
சுக்கு பொடி - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - 1 தேக்கரண்டி(பொடிக்கவும்)
சீரகம் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு பின்ச்
கறிவேப்பிலை - 1 இனுக்க
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தோசை மாவுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
பேனில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கடலைபருப்பு, உளுந்து சேர்த்து தாளிக்கவும் . கடைசியாக பொடித்த மிளகு சேர்க்கவும். தாளித்தவற்றை மாவில் சேர்த்து கலக்கவும்
தோசைக்கல் காய்ந்தததும் மாவை ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
சூடாக பரிமாறவும்.
குறிப்புகள்:
இந்த தோசைக்கு தொட்டுக் கொள்ள மிளகாய் பொடி, பூண்டு பொடி சிறந்தது.
வெறுமனே சாப்பிட்டால் கூட நன்றாக இருக்கும்.
அவசரமாய் செய்ய சிறந்தது.