அழகர் கோவில் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1 கப்

பச்சரிசி - 1 கப்

மிளகு - 2 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் வத்தல் - 8

இஞ்சி - 1 அங்குலம் அளவு

கறிவேப்பிலை - 1 இனுக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புழுக்கலரிசி,உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைத்து, இட்லி மாவு பதத்தில் ஆட்டிக் கொள்ளவேண்டும்.

மிளகு, இஞ்சி, வற்றல் இவற்றை ஒன்றாக ஆட்டிக் கொள்ளவும்.

பச்சரிசியை இடித்து சலித்துக் கொள்ளவேண்டும்.

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வைத்து மறுநாள் காலையில் தோசையாக வார்த்து நெய் விட்டு திருப்பி போட்டு கவனமாக எடுத்து பரிமாறவும்.

அழகர் கோவில் தோசை ரெடி.

குறிப்புகள்: