அரிசி கிச்சடி
தேவையான பொருட்கள்:
ஆழாக்கு அரிசி - 2
பச்சைப்ருப்பு - 1/2 ஆழாக்கு
பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 2
பூண்டு - 10 பல்லு
பச்சைமிளகாய் (நீளமாக கீறியது) - 10
தேங்காய் (துறுவியது) - 1 மூடி
நெய் - 1/2 குழிக்கரண்டி
லவங்கம் - 4
பட்டை - 2
ஏலக்காய் - 4
எண்ணை - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இதை செய்வது மிகவும் எளிமை மிக சீக்கிரமாகவும் செய்யலாம்
முதலில் அரிசி மற்றும் பச்சை பருப்பை 1/2 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
இதை குக்கரிலேயே செய்யலாம், அடுப்பில் குக்கரை வைத்து எண்ணை, நெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் போடவும் சிறிது வதங்கியவுடன் பச்சைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
அடுத்து தேங்காய் துறுவலை போட்டு வதக்கவும் 5 ஆழாக்கு தண்ணீர் சேர்த்து அதில் ஊறவைத்த அரிசி மற்றும் பச்சைபருப்பு போட்டு வேகவைக்கவும்.
குறிப்புகள்:
இதை சூடாக மாங்காய்தொக்கு ஊறுகாயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்