அரிசி உப்புமா (5)
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கிலோ
கடலைப்பருப்பு - 1 கைப்பிடி
துவரம் பருப்பு - 1 கைப்பிடி
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
செய்முறை:
அரிசியை கழுவி காய வைக்கவும். பருப்புகள் மூன்றையும் தனித்தனியே வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.
காய்ந்த அரிசி, வறுத்த பருப்புகள், சீரகம், மிளகாய், பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து மிஷினில் ரவை போல் உடைத்து வைத்துக் கொள்ளவும்.
தேவையான போது வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து ஒரு டம்ளர் ரவைக்கு இரண்டரை டம்ளர் தண்ணீர் வைத்து உப்பு சேர்த்து கொதித்த பின் உடைத்த ரவை சேர்த்து கிளறி பொலபொலவென வெந்ததும் இறக்கவும்.