அரிசி உப்புமா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/4 படி

துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி

வரமிளகாய் - 4

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தாளிக்க:

கடுகு - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - சிறிதளவு

கடலைபருப்பு - சிறிதளவு

பெருங்காய பவுடர் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி - ஒரு இன்ச்

நல்லெண்ணெய் - 100 மி.லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும் பருப்பையும் மிக்ஸியில் ரவையாக பொடித்து வைக்கவும்.

வெங்காயம், இஞ்சியை நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய வரமிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காய பவுடர், நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின் அதில் உடைத்து வைத்துள்ள ரவையை சேர்த்து ரவையில் எண்ணெய் பிடிக்கும் வரை கிளறி இறக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு ரவைக்கு இரண்டரை பங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவை கலவையை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். தண்ணீர் வற்றியதும் பாத்திரத்தை குக்கரில் வைத்து மூடி 3 விசில் வரை வைத்து நிறுத்தவும். பிரஷர் அடங்கியதும் ஒரு கரண்டியின் கைப்பிடியால் கிளறி பின்னர் பரிமாறவும்.

குறிப்புகள்:

வரமிளகாய், புளி வைத்து அரைத்த தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.

வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் போட்டு செய்தால் அது விரத உப்புமா.