அரிசி உப்புமா
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய் துருவல் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3 (அல்லது) 4
பெருங்காயப் பவுடர் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். அரிசி மற்றும் துவரம் பருப்பைத் தனித்தனியாகக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய அரிசி, பருப்பை தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு, தனித்தனியாக மிக்ஸியில் போட்டு (தண்ணீர் ஊற்றாமல்) கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
இஞ்சியுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். அத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அடுப்பில் ப்ரஷர் பான் அல்லது குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். அத்துடன் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுதைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி, பருப்பைச் சேர்த்து, மிதமான தீயிலேயே வைத்துக் கிளறவும்.
அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். பிறகு மேலும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாகச் கலந்துவிட்டு, உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரவிட்டு இறக்கவும். குக்கர் சூடு தணிந்ததும் மூடியைத் திறந்து நன்றாகக் கிளறவும். தண்ணீர் அதிகமாக இருப்பது போலத் தெரிந்தால், அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கிளறி வேகவிட்டு இறக்கவும்.
குறிப்புகள்:
விரும்பினால் நெய் சேர்த்துப் பரிமாறலாம்.