அடை (7)
தேவையான பொருட்கள்:
அரைக்க:
புழுங்கல் அரிசி (அ) இட்லி அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
மிளகாய் வற்றல் - 4 (அ) 5
பூண்டு - 4 பல்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
வெங்காயம் - 2
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பை நன்றாக 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும். அரைக்க தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
அரிசியை தனியாக அரைத்து எடுக்கவும். பருப்பு, மிளகாய வற்றல், பூண்டு, தேங்காய் துருவல் தனியாக அரைக்கவும். இரண்டு மாவையும் கலந்து உப்பு சேர்த்து வைக்கவும்.
தாளிக்க தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுத்து, பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலந்து வைக்கவும்.
தோசை கல்லை காய வைத்து மாவை ஊற்றி, சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு (விரும்பினால்) சுட்டு எடுக்கவும்.
இரண்டு பக்கமும் நல்ல கலர் வரும்படி சிவக்க சுட்டு எடுக்கவும்.
இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம், விரும்பினால் தனியாகவே சாப்பிடலாம். காரம் சேர்ப்பதால் சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.