அடை (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப. அரிசி - 100 கிராம்

பு. அரிசி - 100 கிராம்

பாசிப் பருப்பு - 100 கிராம்

கடலை பருப்பு - 100 கிராம்

துவரம் பருப்பு - 100 கிராம்

உளுந்து - 100 கிராம்

வர மிளகாய் - 5

பூண்டு - 2 பல்

சோம்பு - 1 மேசைக்கரண்டி

பெருங்காயம் - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 200 கிராம்

உப்பு – 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தனியாக ஒரு கிண்ணத்தில் வரமிளகாய், சோம்பு இரண்டையும் ஊற வைக்கவும்.

சின்ன வெங்காயத்தை மிக நைசாக நறுக்கவும்.

அரிசி, பருப்பு கலவை நன்கு ஊறியதும் நன்றாக கழுவி உப்பு, ஊற வைத்த மிளகாய், சோம்பு, பூண்டுப் பல் சேர்த்து கிரைண்டரில் போட்டு ஐந்து நிமிடம் அரைக்கவும்.

வழிக்கும் நேரத்தில் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றியதும் வழித்து எடுக்கவும்.

வெங்காயத்தை மாவுடன் நன்கு கலக்கவும்

தோசைக் கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை வைத்து தோசை போல் ஆனால் சிறிது கணமாக பரப்பி விடவும்.

சுற்றி எண்ணை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்: