அடை (4)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
கடலை பருப்பு - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
பாசி பருப்பு - ஒரு கைப்பிடி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கப்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - 2 இனுக்கு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 7
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி,பருப்புகளை 45 நிமிடம் ஊறவைத்து அரைக்கவும்.
சீரகம், சோம்பு, மிளகாய் வத்தல் இவற்றை அரைத்து மாவுடன் சேர்க்கவும்.
வெங்காயம், தேங்காய் துருவல், உப்பு, கறிவேப்பிலை இவற்றை எல்லாம் மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி தோசையை விட கொஞ்சம் திக்காக அடையாக வார்க்கவும்.
எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு சிவப்பாக மொரு மொருவென வார்த்து எடுக்கவும்.