அடை (3)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 5
வெங்காயம் - 1
கறிவேப்பில்லை - 4 இலை
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பு வகைகளை 2- 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் பருப்பு மற்றும் அரிசியை காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். அரைத்த பருப்பு மற்றும் அரிசியை நன்றாக கலந்து கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லையை பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், கறிவேப்பில்லை, சீரகம் மற்றும் பெருங்காயத்தை அனைத்தும் அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்த்து நன்றாக கலக்கி 1 மணி நேரம் வைக்கவும்.
பின்னர் தோசைக்கல் காய்ந்ததும் அதில் சிறிது கனமான அடைகளாக ஊற்றி மிகவும் குறைந்த தீயில் வேக விடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு மறு பக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.
இப்பொழுது சுவையான அடை ரெடி.