அடை தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 1 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

பச்சரிசி - 1/4 கப்

உளுந்து - ஒரு மேசைக்கரண்டி

மிளகாய் வத்தல் - 5 (காரத்திற்கு ஏற்ப்)

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

தேங்காய் - 1/4 மூடி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து எல்லாவற்றையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்தவற்றுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் நறுக்கின தேங்காய், பொடியாக நறுக்கின கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்க்கவும்.

தோசை கல்லில் தோசை போல் ஊற்றி மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். சுவையான அடை தோசை ரெடி.

குறிப்புகள்:

தேங்காய் சட்னி மற்றும் சீனி தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.