அடை தோசை
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 2 டம்ளர்
பச்சரிசி - 1 டம்ளர்
புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
உளுந்து - 1 டம்ளர்
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
பட்டை வத்தல் (மிளகாய் வத்தல்) - 8 (காரத்திற்கு ஏற்ப)
பூண்டு - 20 பல்
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
மல்லி தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பு வகைகளை 3 மணி நேரம் ஊற விடவும். வெங்காயம், மிளகாய், மல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்
அரிசி பருப்பை கழுவி அதனுடன் பட்டை வத்தல், பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். (நைசாக அரைக்க கூடாது)
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு லேசாக வதக்கவும்.
அரைத்த மாவில் வதக்கிய வெங்காயம், மல்லி தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து தோசை ஊற்றவும். எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பி போட்டு சுடவும். சுவையான அடை ரெடி.
குறிப்புகள்:
தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.