ஃப்ரைடு இட்லி (1)
3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
இட்லி - 5
இட்லி பொடி - 1 அல்லது 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
இட்லியை நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டவும் (4 அல்லது 5 துண்டிகள் வெட்டலாம்)
எண்ணெயை சூடாக்கி அதில் இட்லியை போட்டு சிவக்க பொரிக்கவும்.
பின்னர் சூடாக இருக்கும்போதே பொடி, உப்பை போட்டு பிரட்டி விடவும்.
சுவையான ஃப்ரைட் இட்லி தயார்.
குறிப்புகள்:
அப்படியே சாப்பிடலாம். சாம்பார், தேங்காய் சட்னியுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.