ஃப்ரைடு இடியாப்பம்

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் - 3

முட்டை - 2

வெங்காயம் - 3

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 3

கறிவேப்பிலை - ஒரு கொத்து

சீரகம், கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி

கடலைபருப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 5 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம் சேர்க்கவும். கடுகு வெடித்து முடிந்ததும் கடலைபருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்

பின்னர் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக கண்ணாடி போல் வரும் வரை வதக்கவும்.

பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விடவும்.

பின்னர் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி அதன் பின்னர் தூள் வகைகளை சேர்க்கவும்.

லேசாக நீர்விட்டு ஒரு சேர வரும் அளவுக்கு வதக்கவும்.

அதன் பின்னர் உதிர்த்த இடியாப்பம் சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: