ஹோட்டல் சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1 டம்ளர்
பெரிய வெங்காயம் - 1
சின்னவெங்காயம் - 7
தக்காளி - 4
மஞ்சள் பொடி - சிட்டிகை
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லித்தழை - சிறிது
கட்டிப் பெருங்காயம் - 1/4 இன்ச் துண்டு
முருங்கைக்காய் - 1
கத்தரிக்காய் - 3
வெல்லம் - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 5
சீரகம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பு, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சிறிய வெங்காயம், மஞ்சள் பொடி, பெருங்காயம், வெல்லம் ஆகியவற்றை 2 1/2 கப் நீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
வெந்ததும் குழிகரண்டியால் நன்கு மசித்து விட்டு மேலும் 1/2 டம்ளர் நீர் சேர்த்து 2 இன்ச் நீளத்திற்கு நறுக்கிய முருங்கை, சிறிய சதுரங்களாக நறுக்கிய கத்தரிக்காய், உப்பு சேர்த்து மேலும் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
சாம்பார் பொடியை சிறிது நீரில் கரைத்து சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.