வெந்தயக்கீரை சாம்பார் (1)
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - ஒரு பெரியக் கட்டு
துவரம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மிளகாய் - 1
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
புளியை உப்பு சேர்த்து வெந்நீரில் கரைத்து எடுத்து வடிகட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.
வெந்தயக் கீரையில் இலைகளை மட்டும் தனியே ஆய்ந்து எடுத்து நறுக்கி உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
உப்பு சேர்ப்பதினால் கீரை சற்று நேரத்தில் நீர் விட ஆரம்பிக்கும். இப்போது அதனை எடுத்து ஒன்றுக்கு இரண்டு முறையாகக் கழுவி நீரை வடிய விடவும். கீரையின் கசப்புத் தன்மை குறைந்து இருக்கும்.
துவரம் பருப்பில் மஞ்சள் பொடி போட்டு குக்கரில் நன்றாக வேக விட்டு எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெந்த துவரம் பருப்பு, வடிய விட்ட கீரையை எடுத்து பிழிந்து போடவும்.
அத்துடன் சாம்பார் பொடியும், மஞ்சள் பொடியையும் சேர்த்து வேக விடவும். கீரையும், பருப்பும் சேர்ந்து வெந்த பின் புளிக் கரைசலை அதில் ஊற்றவும்.
பச்சை வாசனை போய் நன்கு கொதித்து வந்தவுடன் வாணலியில் கடுகு, பெருங்காயம், மிளகாய் போட்டுத் தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து பொங்கி வரும் சமயம் இறக்கி பரிமாறவும்.