வெண்டைக்காய் சாம்பார் (1)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - ஒரு கோப்பை

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

வெங்காயம் - இரண்டு

தக்காளி - இரண்டு

வெண்டைக்காய் - கால் கிலோ

புளி - நெல்லிக்காய் அளவு

பூண்டு - நான்கு பற்கள்

மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி

தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி

காய்ந்தமிளகாய் - இரண்டு

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

துவரம்பருப்பை நன்கு கழுவி மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். குழைய வைக்க வேண்டாம்.

புளியை ஒரு கோப்பை சுடுதண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

வெண்டைகாயை கழுவி நன்கு துடைத்து இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வெறும் சட்டியை காய வைத்து காய்களைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். சற்று தீய்ந்தாலும் பிரச்சனையில்லை.

பிறகு வெந்த பருப்பில் புளிக் கரைச்சலை ஊற்றவும். தொடர்ந்து உப்பைப் போட்டு எல்லாத்தூளையும் போட்டு பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் நசுக்கிய பூண்டைப் போட்டு நன்கு கலக்கவும்.

பிறகு அதில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து பச்சை வாசனை நீங்கியவுடன் வதக்கிய வெண்டைக்காயைப் போட்டு கலக்கி ஐந்து நிமிடம் நல்ல அனலில் கொதிக்க விட்டு இறக்கி விடவும்.

ஒரு சிறிய சட்டியில் தாளிப்பு பொருட்களைப் போட்டு சிவக்க வறுத்து குழம்பின் மீது கொட்டவும்.

சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயார்.

குறிப்புகள்: