வெண்டைக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 250 கிராம்
மசூர் பருப்பு - 3/4 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 6 பல்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
மல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மசூர் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு, அதனுடன் புளியைக் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி சேர்த்து கலந்து வைக்கவும்.
வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி நிறம் மாறாமல் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பாதி மல்லித் தழை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பருப்புக் கலவையை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.
கொதித்ததும் பொரித்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் மீதியுள்ள மல்லித் தழையைத் தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
வெண்டைக்காயை பொரிக்க விரும்பாதவர்கள் வெறும் கடாயில் வதக்கிக் கொள்ளலாம்.
சூடான சாதத்துடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.