வாழைமொட்டு சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு-1 டம்ளர்
வாழைமொட்டு -2
சின்ன வெங்காயம் -15
நாட்டு தக்காளி -2
மஞ்சள்பொடி-1 சிட்டிகை
பெருங்காய பொடி -1 சிட்டிகை
சாம்பார் தூள்- 3 தேக்கரண்டி.
புளி-எலுமிச்சை அளவு.
உப்பு- தேவையான அளவு.
தாளிக்க:
எண்ணெய்-1 ஸ்பூன்
கடுகு,சீரகம் -1 ஸ்பூன்.
வரமிளகாய் -2
கருவேப்பிலை-சிறிது
செய்முறை:
வாழைமொட்டை ஆய்ந்து அதன் உள்ளே இருக்கும் மொட்டை எடுத்து வைக்கவும்..அதனுடன் வாழைப்பூவையும் எடுக்கவும்..
பருப்புடன் வெங்காயம் தக்காளியை சேர்த்து வேக வைக்கவும்..தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
வெந்ததும் பெருங்காய பொடி ,மஞ்சள் தூள் சேர்த்து வாழை மொட்டுகளை சேர்க்கவும்..
பாதி வெந்ததும் மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் புளியை கரைத்து ஊற்றவும்..
நன்றாக கொதித்ததும் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித பொருட்களை தாளிக்கவும் ..சாம்பாரில் சேர்த்து கிளறி சிறிது நேரத்தில் அடுப்பை நிறுத்தவும்...
சுவையான வாழைமொட்டு சாம்பார் ரெடி..