வாழைத்தண்டு சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
வாழைத்தண்டு - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 10
சிறிய தக்காளி - 1
புளி தண்ணீர் - 1/2 கப்
சாம்பார் பொடி - தேவையான அளவு
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
மல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
செய்முறை:
வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாழைத் தண்டை விரும்பிய அளவில் நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கச் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி, நறுக்கிய வாழைத் தண்டைச் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய வாழைத் தண்டுடன் புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
கொதித்ததும் மல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.