ருசியான சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 4
சாம்பார் வெங்காயம் - 1 கப்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் - 1/2 கப்
கொத்துமல்லி - 1 கப்
தாளிக்க:
கடுகு - 1 தேக்காரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
பிரஷர் பேனில் பருப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு குழைய வேக வைத்து நன்கு மசிக்கவும்.
அரைக்க கூறிய பொருட்களை சிறிது நீர் சேர்த்து மைய அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நீர் சேர்த்து வேகவிடவும்.
அதில் புளிக் கரைசல், பச்சை மிளகாய்,உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு மசித்த பருப்பு கலவையை அதில் கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் இரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சாம்பாரை இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் விடவும்.
கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து சாம்பாரில் சேர்த்து பரிமாறவும்.