ரத்னா கபே சாம்பார்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்

சாம்பார் வெங்காயம் - 1 கப்

தக்காளி - 2 - 3

பூண்டு - 5 பல்

வெள்ளை பூசணி (சிறிய சதுரங்களாக வெட்டியது) - 1/2 கப்

முருங்கைக்காய் - 1/2 கப்

வெல்லம் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - கைப்பிடி

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

புளிச்சாறு - 1 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப்

நெய் - 1/2 கப்

எண்ணெயில்லாமல் வறுத்து பொடிக்க:

தனியா - 2 - 4 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 அல்லது 4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - கைப்பிடி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5

பெருங்காயம் - 1 தேக்கரண்டி

செய்முறை:

குக்கரில் சிறிது நெய் விட்டு, துவரம் பருப்பை லேசாக நெய்யில் பிரட்டி பிறகு 2 - 3 கப் தண்ணீர் சேர்த்து 3 - 4 விசில்கள் வரை வேக வைக்கவும்.

ஒரு வாணலியில், சிறிதளவு நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும்.

இதில் வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

எல்லாக் காய்கறிகளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு மஞ்சள், மிளகாய் பொடிகள், வெல்லம், உப்பு, 1 டீஸ்பூன் அரைத்த சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

இத்துடன் வேகவைத்த பருப்பை சேர்த்து, தண்ணீரையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் புளிச் சாறையும் சேர்த்து, மீதமுள்ள அரைத்த சாம்பார் பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும்.

இறுதியில் சிறிது நெய்யையும், கொத்தமல்லியையும் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: