மைக்ரோவேவ் சாம்பார்





தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 75 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு (தோலுரித்தது) - 4 பல்
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள்.- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நெய் அல்லது நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
காய்கள்:
நறுக்கிய கத்தரிக்காய் - 1
நறுக்கிய முருங்கைக்காய் - 1
உரித்த சாம்பார் வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி - 1
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
வறுத்து பொடி செய்ய:
காய்ந்த மிளகாய் - 5
முழு தனியா - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
செய்முறை:
வறுக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகக் கலந்து 1/4 தேக்கரண்டி எண்ணெயில் பிரட்டி, ஒரு நிமிடம் மைக்ரோவேவ் அவனில் ஹையில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த கலவையை மிக்ஸியில் நீர் சேர்க்காமல் பொடி செய்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு பருப்பையும் ஒன்றாகக் கலந்து, 1/2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மைக்ரோவேவ் பாத்திரத்தில், ஊற வைத்த பருப்பையும், பருப்பு நன்கு மூழ்கும் அளவு நீர் ஊற்றி மஞ்சள், சீரகம், 1/4 தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து, மைக்ரோவேவ் ஹையில் மூடி போட்டு 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
மைக்ரோவேவ் standing time ஆனவுடன் எடுத்து, கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன், நறுக்கி வைத்த காய்கள், உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத் தூள் இவற்றை கலந்து மூழ்கும் அளவு நீர் சேர்த்து, 10 நிமிடம் அவனில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் நெய், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
அவற்றை சாம்பார் கலவையுடன் கலந்து, பொடித்த பொடியை சேர்த்து, நன்கு கலந்து, 2 நிமிடம் அவனில் வைத்து எடுத்து கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.