மெட்ராஸ் சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1 கோப்பை
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
வெங்காயம் - 2
தக்காளி - 2
புளி - எலுமிச்சையளவு
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 1
குடைமிளகாய் - 1
முருங்கைக்காய் - 2
உப்பு தூள் - தேவையான அளவு
அரைப்பதற்கு:
காய்ந்தமிளகாய் - பனிரெண்டு
தனியா - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - 1/4 கோப்பை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1/4 கோப்பை
கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
துவரம்பருப்பை கழுவி அதில் பூண்டு, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூளை போட்டு குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து இரண்டு கோப்பை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை வெறும் சட்டியில் போட்டு சிவக்க வறுத்து மையாக அரைத்து வைக்கவும்.
காய்கறிகளை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
பிறகு குழம்பைக் கூட்டும் சட்டியில் புளித்தண்ணீரை ஊற்றி அதில் அரைத்த விழுதைச் சேர்த்து கலக்கவும். பின்பு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு உப்பையும் சேர்த்து மேலும் சிறிது நீரைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
காய்கள் அனைத்தும் நன்கு வெந்தவுடன் வேகவைத்துள்ள பருப்பை கொட்டி நன்கு கலக்கி விடவும்.
கலக்கிய சாம்பாரை மேலும் பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காயவைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு கருக வறுத்து சாம்பாரின் மீது கொட்டி பரிமாறவும்.
குறிப்புகள்:
மாங்காய் சீசனில் புளியை தவிர்த்து விட்டு இரண்டு பச்சை மாங்காயை சேர்த்துக் கொள்ளலாம்.