முருங்கை சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
முருங்கை காய் - 2
கேரட் - 1
கத்திரிக்காய் - 2
பெருங்காயம்,மஞ்சள் - சிறிது
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 1
கடுகு - தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
காய்களை வெட்டி வைக்கவும்,வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்,தக்காளியை நறுக்கவும்.
பருப்பை கழுவி குக்கரில் கொஞ்சம் எண்ணெய் மஞ்சள்தூள் மற்றும் ,பெருங்காயம் சேர்த்து மூன்று அல்லது நாலு விசில் வைக்கவும்.
வெந்தபருப்புடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சின்ன வெங்காயம் ,தக்காளி சேர்த்து பின் காய்கறிகளையும் சேர்க்கவேண்டும்.
முருங்கைக்காய் நன்றாக வெந்ததும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பின் புளியை கரைத்து சேர்க்கவும் (தேவையான அளவிற்கு புளி தண்ணீர் சேர்க்கும் போதே தண்ணீர் சேர்த்துக்கவும்)
மிளகாய் வாசம் போகும் வரை ஒரு பத்து நிமிடமாவது கொதிக்க வேண்டும்.
பின் வாணலில் எண்ணெய் ஊற்றி மிளகாய் ,கடுகு சேர்த்து வெடித்ததும் பெருங்காயம் சேர்த்து ,கருவேப்பிலை சேர்க்கவும்.இதை சாம்பாருடன் சேர்க்கவேண்டும்.
இரண்டு நிமிடம் கொதித்த பின் வேறு பாத்திரில் மாற்றவும்.
குறிப்புகள்:
சூடான சாதத்துடன் சாப்பிடவும்