முருங்கை கீரை சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100
முருங்கை கீரை - 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
வெள்ளை பூடு - 8 பல்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கத்திரிக்காய் - 2
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்பை அலசி அத்துடன் வெள்ளை பூடு, தக்காளி,பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், பாதி வெங்காயம் சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.
பின்னர் அதில் கத்தரியும், கீரையும் சேர்த்து ஒரு விசில் விட்டு உடனே திறந்துவிடவும்.
வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும். பின் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பெருங்காயம், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
அதனை பருப்பில் சேர்த்து தேவையான நீர் சேர்த்து சிறுது நேரம் கொதிக்க விட்டு பின் இறக்கி பரிமாறவும்.