முருங்கக்கீரை சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கக்கீரை - 2 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 5

தக்காளி - 1

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு சீராக தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி

கடுகு, பெருங்காயம், கருவேப்பில்லை, எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம்பருப்பை குழைவாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

மிளகு சீராக பொடி இல்லாவிடில் 1/4 ஸ்பூன் மிளகு 1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடித்து வைக்கவும்.

எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து குழைவாகவும் வரை வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள் , மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் சுத்தம் செய்துள்ள கீரையை சேர்க்கவும்.

கீரை முக்கால் பாகம் வெந்தவுடன் வேகவைத்த பருப்பை 1 கப் தண்ணீர் சேர்த்து குழம்பில் ஊற்றவும்.

கீரை வெந்ததும் மிளகு சீராக தூள் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: