மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 2

முருங்கைக்காய் - 1

புளி - சிறிய எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

காய்ந்த மிளகாய் - 8

பெருங்காயம் - சிறிது

தேங்காய் எண்ணை- 1 மேசைக்கரண்டி

பச்சைக் கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்துக் குழைய வேக வைக்கவும்.

வெங்காயத்தை உரித்து வைக்கவும்.

தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும்.

முருங்கைக்காயை நறுக்கி வைக்கவும்.

பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.

எண்ணையைக் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, உரித்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய முருங்கைக்காயைப் போடவும்.

புளியைக் கரைத்துச் சேருங்கள்.

உப்பு சேர்த்து, புளி வாசனை போனதும், பருப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: