மாம்பழ சாம்பார்
தேவையான பொருட்கள்:
சிறிய மாம்பழம் - 3
துவரம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
வெல்லம் - 3 மேசைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மல்லிவிதை - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணை - 1 மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - சிறிய கரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மாம்பழத்தைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மல்லிவிதை, மிளகாய் வற்றல், வெந்தயம், பெருங்காயம் இவற்றை வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சிவக்க வறுத்து ஒன்றாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பில் மஞ்சள் பொடியை போட்டு நன்றாக குழைய வேகவிட்டு கரண்டியால் மசித்து வைத்துக் கொள்ளவும்.
உப்பு, புளி, வெல்லம் மூன்றையும் ஒன்றாய் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெந்த பருப்பினைப் போட்டு, அதில் நறுக்கின மாம்பழத்துண்டங்களையும் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.
வெந்த பிறகு புளிக்கரைசலை அதில் ஊற்றி கொதிக்க விடவும். புளி கொதித்து பச்சை வாசனை போன பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியைப் போட்டு நன்றாகக் கலக்கி விடவும்.
சிறிது நேரத்தில் குழம்பு கெட்டியாகி விடும். அப்பொழுது கீழே இறக்கி வைத்து விடவும்.
தாளிக்கும் கரண்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு அது வெடித்தவுடன் இறக்கி அப்படியே குழம்பில் கொட்டவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு பரிமாறவும்.