மாங்காய் சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

கேரட் - 1

கத்திரிக்காய் - 2

மாங்காய் - 4 துண்டு

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை

புளி - எலுமிச்சை அளவு

உப்பு - தேவைக்கு ஏற்ப

தாளிக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

குக்கரில் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கேரட், கத்திரிக்காய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணெய் ஒரு சொட்டு விட்டு நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வெந்ததும் அதில் மிளகாய்தூள், உப்பு, புளிக்கரைசலை சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் மாங்காவை சேர்த்து வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றை கொதிக்கும் சாம்பாரில் கொட்டவும்.

இரண்டு நிமிடத்திற்கு பின் அடுப்பை நிறுத்தி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

குக்கரில் காய்களை ஒன்றாக வேக வைப்பதால் கரையும் என்று நினைக்க வேண்டாம். எண்ணெய் விட்டு வேக வைப்பதால் கரையாது உடையவும் உடையாது.

புளி சேர்த்த பின் மாங்காய் சேர்க்கவும்..