மாஇஞ்சி சாம்பார்
தேவையான பொருட்கள்:
மா இஞ்சி - பெரிய துண்டு
சின்ன வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - சிட்டிகை
வெந்தயத்தூள் - சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
பாசி பருப்பு - 1/2 கப்
பெருங்காயம் - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணை - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கீற்று
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை வாசம் வரும்வரை வெறும் வாணலியில் வறுக்கவும்
சின்னவெங்காயம் தோலுரித்து நீளவாக்கில் நறுக்கவும்
தக்காளி பொடியாக நறுக்கவும்
இஞ்சியை தோல் சீவி கால்கப் அளவுக்கு துருவி கொள்ளவும்
ப்ரஷர் குக்கரில் பருப்பு,வெங்காயம் தக்காளி,இஞ்சித்துருவல் ,பச்சைமிளகாய்
மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள் மற்றும் கட்டி பெருங்காயம் உப்பு
தேவையான நீர் சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்
பின் வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,காய்ந்தமிளகாய் சேர்த்து தாளித்து சிட்டிகை வெந்தயத்தூள் சேர்த்து தாளித்து கொட்டவும்
பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.