மசூர் தால் கோவக்காய் சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைக்க - 1:

மசூர் தால் - 1/2 கப்

துவரம் பருப்பு - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 6

வேகவைக்க - 2:

சின்ன வெங்காயம் - 4

உப்பு -‍ 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரன்டி

கோவக்காய் - 8

பூசணிக்காய் ‍- ஒரு துண்டு

கேரட் - பாதி துண்டு

தக்காளி - ‍ 1

புளி - சிறிய எலுமிச்சை அளவு

வெல்லம் - ஒரு பிட்டு

வறுத்து பொடிக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 4

முழு தனியா - 2 தேக்க‌ர‌ண்டி

கடலை பருப்பு - 2 தேக்க‌ர‌ண்டி

வெந்தயம் - 1/4 தேக்க‌ர‌ண்டி

மிளகு - 1/4 தேக்க‌ர‌ண்டி

சீரகம் - 1/2 தேக்க‌ர‌ண்டி

காய்ந்த கறிவேப்பிலை - சிறிது

தாளிக்க:

எண்ணெய் ‍-‍ 3 தேக்க‌ர‌ண்டி

சின்ன‌ வெங்காய‌ம் - 2

பூண்டு - 2 ப‌ல்

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 3

கறிவேப்பிலை - ஐந்து ஆர்க்

பெருங்காயம் - ஒரு பின்ச்

நெய் - 1/2 தேக்க‌ர‌ண்டி

செய்முறை:

வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு பருப்பு வகைகளையும் சேர்த்து களைந்து அதனுடன் சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து வேக வைக்கவும்.

பருப்பு வெந்ததும் இறக்கி லேசாக கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.

காய்கறி வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

காய்கறிகள் பாதியளவு வெந்ததும் வறுத்து பொடித்தவற்றை அதில் சேர்க்கவும்.

புளியை கரைத்து அதனுடன் ஊற்றி வெல்லம் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவும்.

கொதித்ததும் வெந்த பருப்புகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கவும்.

இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து சாம்பாருடன் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கோவக்காய் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் இதுபோல் சாம்பார் கூட்டு, வறுவல் என்று செய்து சாப்பிடலாம்.