ப்ளைன் இட்லி சாம்பார்
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - பாதி
கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிதளவு
தேங்காய்ப்பால் - 1/2 கப் (தேவைப்பட்டால்)
உப்பு - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
அரைக்க:
துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி (ஊற வைத்தது)
பட்டை - 1 இன்ச்
லவங்கம் - 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
தக்காளி - 1
மிளகாய்தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
செய்முறை:
பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் மையாக அரைத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த விழுது, 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் தேங்காய்பால் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் குக்கரை மூடி 1 அல்லது 2 விசில் விட்டு இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.