ப்ரோக்கோலி தண்டு சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 2 கப்

ப்ரோக்கோலி தண்டு - 3

சின்ன வெங்காயம் - 1 கப்

பூண்டு - 1 பல்

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி

புளி பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி

வெல்லம் - சிறிதளவு

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க: எண்ணெய்,கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

செய்முறை:

பாத்திரத்தில் துவரம் பருப்புடன் பூண்டு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பாதி தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் அரை பதம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

வதங்கியதும் நறுக்கிய ப்ரோக்கோலித் தண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்,

பிறகு சாம்பார் தூள், உப்பு மற்றும் புளிக் கரைசல் சேர்த்து, தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

அத்துடன் வேக வைத்த துவரம் பருப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதி வந்ததும் ப்ரோக்கோலித் தண்டு வெந்ததைச் சரி பார்த்து, வெல்லம் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்துடன் பரிமாறவும்