பூசணிக்காய் சாம்பார் (1)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - ஒரு சிறிய டம்ளர்

மஞ்சள் பூசணி - 2 கீற்று

தக்காளிப்பழங்கள் - 2

புளி - எலுமிச்சை அளவு

காய்ந்தமிளகாய் - 12

தேங்காய் - அரை மூடி

சீரகம் - 1 1/2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

போதுமான தண்ணீர் விட்டு குக்கரில் துவரம்பருப்பை நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

எட்டு மிளகாய், தேங்காய், சீரகம் மூன்றையும் ஒன்றாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

எண்ணெயைப் பாத்திரத்தில் ஊற்றிக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும் காய்ந்த மிளகாய்களைக் கிள்ளிப் போட்டுக் கறிவேப்பிலையையும் போட்டு வெடித்ததும் தக்காளிப் பழங்களை வெட்டிப் போடவும்.

பிறகு அதனுடன் அரைத்து வைத்தவற்றை சேர்த்து வதக்கவும்.

சற்று வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி உப்புப் போட்டுக் கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் நறுக்கின பூசணித் துண்டங்களைப் போட்டு வேக விடவும். பூசணிக்காய் வெந்ததும் வெந்த துவரம் பருப்பைக் கலந்து வேக விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: