பூசணிக்காய் சாம்பார்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

நறுக்கிய வெள்ளை பூசணிக்காய் (சிறிய பூசணிக்காயில் கால் பங்கு)

வெங்காயம் - 1

தக்காளி - 1

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

துவரம் பருப்பு - 1/2 கப்

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்பை களைந்து வைக்கவும். காய்களை நறுக்கி வைக்கவும்.

புளியை சிறிது நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

பருப்புடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து தேவையான நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். (ஒரு விசில் வரும் வரை விட்டு சிறுந்தீயில் 10 நிமிடம் வைக்கவும்).

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

இதில் வேக வைத்த பருப்பு கலவை ஊற்றி அதில் நறுக்கிய பூசணிக்காய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் நீர் விட்டு மூடி வேகவிடவும்.

காய் வெந்ததும் புளி கரைசல் சேர்த்து கொதித்ததும், கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.