புரோக்கலி சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புரோக்கலி - ஒரு பூ

துவரம் பருப்பு - 1 கப்

சின்ன வெங்காயம் - 12 அல்லது 15

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி

புளி - எலுமிச்சம் பழம் அளவு

கொத்தமல்லி - ஒரு பிடி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

துவரம்பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

புரோக்கலியை கழுவி பூ மற்றும் தண்டை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். பின் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் புரோக்கலி, தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும். பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து வேக வைக்கவும்.

புரோக்கலி விரைவில் வெந்துவிடும். காய் வெந்ததும் வேக வைத்த துவரம் பருப்பு சேர்க்க வேண்டும்.

பின் கரைத்து வைத்து இருக்கும் புளியை சேர்க்கவும்.

இப்போது உப்பு, புளி, காரம் சரிப்பார்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

சிறிது கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதம், இட்லி, தோசை, பொங்கலுக்கு இது நன்றாக பொருந்தும்.