பீட்ரூட் இலை சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் இலை & தண்டு - 10 அல்லது 15

பெரிய வெங்காயம் - 1

பெரிய தக்காளி - 1

வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்

புளி - நெல்லிக்காய் அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 5 இலைகள்

பட்டை மிளகாய் - 1

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பீட்ரூட் இலைகளை நன்றாக கழுவி, பொடியாக அரியவும்.

வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

தக்காளியையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து பின்னர் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கிய பிறகு பீட்ரூட் தண்டுகளை சேர்க்கவும்.

அத்துடன் பொடியாக அரிந்து வைத்துள்ள பீட்ரூட் இலைகளையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.

புளித்தண்ணீர் நன்கு கொதித்து வந்தவுடன், வேகவைத்த பருப்பையும் போட்டு, சாம்பார் பொடியும் போட்டு 20 நிமிடம் வேகவிட வேண்டும்.

கடைசியாக கொத்தமல்லி இலை போட்டு இறக்க இறக்கி பரிமாறவும்.

இப்போது சுவையான பீட்ரூட் இலை சாம்பார் ரெடி.

குறிப்புகள்:

இதனை சாதத்திற்கு ஊற்றி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

பீட்ரூட் இலையில் பொரியல் செய்யலாம்.

தண்டை மட்டும் சேர்த்து சாம்பார் செய்யலாம். கூட்டும் செய்யலாம்.